Sonntag, 21. Juli 2013
Sri Rangan Vijayaratnam
வடமாகாண எழுத்தாளர்கள் தம்மால் முடிந்தளவு "யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு" க் குறித்துப் பாரிய எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதென்பது...
இரு முனைகளாக இயங்கும் ஆதிக்க மூலதனவூக்கத்தில் ஒரு பகுதி மேற்கு மூலதனத்துக்கேற்ற திசைவழியைக்கொண்டியங்குகிறது. மறு தளமானது ஆசிய மூலதனத்துக்கேற்றபடி இயங்க முனைகிறது.
இந்த இரண்டு தளமும்(ஆசிய-மேற்கு பொருளாதார அணிகள்) சிங்கள இனவாத அரசினது தமிழ்பேசும் மற்றும்சிறுபான்மை இன மக்கள்மீதான பொருளாதார-இன-பாண்பாட்டு ஒடுக்குமுறையை அங்கீகரித்தபடியும், தார்மீக ஒத்துழைப்பையும்நல்கியபடியுந்தாம் இலங்கையை முற்றுகையிட முனைகின்றன.
இன்றும், மௌன்ட் பெலரின் சொசைட்டி[Mont Pelerin Society ] போர்ட் மென்பராக இருக்கும் இரணில் விக்கிரமசிங்காவை அண்மித்தியங்கும் தமிழ் ஓட்டுக்கட்சிகளை இங்கு முன் வைத்து யோசித்தால் இந்த "யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பை இரு தரப்பும் (மேற்கு-ஆசிய விசுவாசம்) வரவேற்று ஆதரிக்கிறது என்பதையும்,நமது புலம் பெயர் தளம் இவ்விரண்டு முகாங்களது லொபியாக [Lobbying is often spoken of with contempt, when the implication is that people with inordinate socioeconomic power are corrupting the law in order to serve their own conflict of interest.] இயங்குவதை அறியக் கூடியதாகவிருக்கிறது.
உதாரணத்துக்கு தமிழரங்க இரயாகரன்கோஷ்டி(புரட்டுப் புரட்சி) - இராகவன் கோஷ்ட்டி(தலித்துவ முன்னணி-அபிவிருத்தி,ஜனநாயகம்) இரண்டுமே ஒவ்வொரு தெரிவில் ஆதரிக்கின்றன.இங்கே, இராகவன்-சோபாசக்தி அணி,இரயாகரன் போன்ற பினாமிகள் எங்கே-எப்படி தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட சிங்கள இனவொடுக்குமுறையை,எதன் தெரிவில் மறைமுகமாக ஆதிரித்தும்-எதிர்த்தும் இயங்குகின்றார்களென்பதைப் புரிவதன்வழி, இன்னும் பாரிய பின்னடைவுகளைத் தமிழ் பேசும் மக்கள் சந்திப்பதைத் தடுக்கலாம்.
இதன் தெரிவில் அணிச் சேர்க்கையாகும் ஒவ்வொரு தளத்திலும் பத்திப்படரும் இலங்கை அரசினது மையச் சிந்தனையோட்டத்தின் ஆதாரமான "ஆதிக்கம்"அதன் வினைத் தொடரைப் புலம் பெயர் தளங்களில் மிக இலகுவாக நிலைப்படுத்தப்படுவதற்கும்,அந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாதவொரு சூழலை உருவாக்கவும் இங்கே கொட்டை போட்டு நீரூற்றுகிறது.
இதையெல்லாம் இலங்கையிலிருப்போர் எதைக்கொண்டு அழைத்தால்மட்டும் அது மகிந்தாவைப் புடுங்கும்,சிங்கள அரச ஆதிக்கத்தையும்-அரச வன்முறை ஜந்திரத்தின் கெடுபிடிகளையும் இல்லாதாக்கித் தமிழர்களது சுய நிர்ணயவுரிமையை அங்கீகரிக்க ஏதுவாகிவிடுமெனும் கூத்து முற்று முழுதான போக்கிரித்தனமாகும்.
அங்கே,ஆதிக்கச் சக்திகளது தெரிவுக்கான வியூகங்களைத் தம்மையறியாது ஒப்புதலோடு தொடர முனையும் "எழுத்தாள"நாயகர்களை எண்ணி வருந்தத்தாம் முடியும்.
எனினும், வடமாகாண எழுத்தாளர்கள் தம்மால் முடிந்தளவு இந்த "யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பு"க் குறித்துப் பாரிய எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதென்பது என்னை மீளவும், எழுதத் தூண்டுகிறது!.அவர்களுக்கு எனது தார்மீக ஆதரவுண்டு!-வாழ்த்துக்கள் தோழர்களே!
ஸ்ரீரங்கன்
20.07.2013
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen